காற்று
பட்டதை காற்றில்
பறக்க விட்டு விட்டு
புது பட்டம் வாங்கினோம் .
படித்ததை காற்றில்
பறக்க விட்டு
பட்டதை மட்டும்
வாங்கினோம்.
இப்போது ..
காற்றை கலங்கடித்து
நாம் கலங்கி போய்
நிற்கிறோம் .
காசு கொடுத்து
காற்று வாங்கி
மூச்சு விடு
உயிர் வாழ்வதற்கு ..
மூச்சு திணறி
மாண்டு போகலாம்
மனித குலம்- காற்றை
மாசு படுத்திய குற்றத்திற்கு .