தோல்வியில் கர்வம்

தோல்வியில் கர்வம்

உன் சிறு அசைவுக்கு கூட
கவிதை தோன்றுகிறது எனக்கு...
வெளிக்காட்டி விடுகிறேன்.

என் பெரு முயற்சிக்குகூட
எவ்வித சலனமும் இன்றி
இருக்க முடிகிறது உன்னால் மட்டும்.

உன் நிர்சலனம் வெற்றி கொள்கிறது
என் கவிதைகளை, உன் விருப்பபடி...

தோல்வியில் கர்வம் கொண்டு
மீண்டும் ஜனித்து பயணிக்கிறது
என் கவிதை சூரியன்....

எழுதியவர் : செந்ஜென் (12-Mar-16, 12:58 am)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : tholviyil karvam
பார்வை : 91

மேலே