நடமாடும் நதிகள் 36

           நடமாடும் நதிகள்..... 36


மழையில் நனைந்தும்
மாறவில்லை வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம்...1

இரண்டாம் பிரசவத்திலும் பெண்
தடுத்து விடு பாரதி
கொலை......2

யாரிடமும் சண்டைபோடவில்லை
போதிக்கும் போதி மரம்
அறிவு.....3

மழையோடு வருகிறது
தேவதைகள் சீர்வரிசை
மண் வாசனை.....4

பொதுநலமாய் பொழிந்த மழைக்கு
இசைகிறது கருப்புக்குடை
சுயநலம்.....5

எதிர்பாராத நேரத்தில் குழந்தை தரும்
ஆஸ்கார் விருது
முத்தம்......6

புள்ளி இல்லா வானத்தில்
கோலமிடுகிறாள்
வெள்ளை புறா....7

என் அவசரம் புரியாமல்
ஆமையின் பிடியில் கடிகார முட்கள்
விவேகம்......8

வெடிக்கவில்லை மத்தாப்பூ
தீக்குச்சிகள் செய்த குழந்தைகள் கண்ணீர்
வறுமை.......9

கூந்தல் உலர்த்தும் பாவைக்கு
பிரசவ வேதனை சித்திரையில்
மயிலிறகு.....10


திரு.ஜின்னா ,
திரு.முரளி அய்யா,
திரு.ஆண்டன்பெனி ,திரு.கமல்காளிதாஸ் 
ஆகியோருக்கும்
அன்பான எழுத்து நண்பர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

அன்புடன்
ஜெயராஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Mar-16, 12:40 am)
பார்வை : 216

மேலே