அத்தான்

என்னை விட்டு தணியே நடக்க
யாரிடம் கற்றுக்கொண்டது
உன் பாதம்?
எட்டும் கனி நானிருக்க
எட்டி பறிக்க கை இல்லையா!!!

விழிகள் பேசும் மொழிகள்
பேசா!!!
மெய்களை மவுனமொழி வித்தை பேச கற்று தரவா!!!
உனக்கு

கல் நெஞ்ச கள்வனே!!! என்
கண்ணீர் மட்டும் போதுமா!!!
உன் நெஞ்சை கரைப்பதற்கு
போதவில்லை எனில்கூறு........
என்
உதிரத்தையும் அபிஷேகம்
செய்கிறேன்

ரதி தேவி இல்லை நான்
சோகம் உன்னை சூழ
துன்பத்தில் நீ வாழ
தேவி நானே!!!
உனை காக்கும் தேவியும்
நானே!!!

குடிகாரன் ஒருவன் போதையில் புலம்ப
கேட்கிறேன்
உன் போதையில்
என் புலம்பலை அறிவாயா?
நீ....

கனவில் கூட நீவீர்
வருவதில்லை
அதனால் தான்
நித்தம் சாகும்
என் கற்பனைகள்
இன்றாவது நீ
வருவாயா? என்று

பெருங்கடலும் தலைகுனிய கூடும்....
என் விழி ஈரத்தால்
உன் பிரிவை தாங்கி கொள்ள
சக்தி இருந்தும் புரிய புத்தி இல்லை

இன்றாவது புரியுமா!!!
என் காதல் புரிந்தால் கல்லறை
போகும் முன்னே!!! தொட்டு விடு என் தேகத்தை
உயிர்தேழுவேன் உன்னவளாக
நான் இறந்த பின்னும் கூட

இன்னும் என் காதல் புரியவில்லை எனில்
கண்ணீரோடு பார் என்
கல்லறையை... உள் சுவாசிக்கும்
என் மூச்சு உன் பெயரை
சுமந்து கொண்டு செல்வதை...

தவறி கூட தட்டிவிடாதே!!!
என் கல்லறை கதவுகளை
அங்கே!!! ஆவது நிம்மதியாக தூங்கட்டும்
என் விழிகள்...
கனவிலாவது உன்னுடன்
நான் வாழ...


நீ...... உணராததை
உணர்ந்த ஒர் உறவு

நண்பன்

எழுதியவர் : vviji (14-Mar-16, 12:05 pm)
Tanglish : kallarai
பார்வை : 900

மேலே