உடைந்து நொறுங்குகிறது உன் சித்திரக் காடுகளின் நுனி

நீ நின்றிருக்கிறாய்...
ஒரு நிழல் என
வெறித்திருக்கிறாய்...
உன் வெளியின் மாயம்
நானறிவேன்...
உன் கனவின் தூரம்
என்னிடமே உண்டு...
சர்ப்பத்தின் மொழிகளை
பெயர்த்து விட்டு
அச்சத்தின் சூது கவ்வ நீ
நிற்கும் நொடியில்
நான் அர்த்தமற்று கரைகிறேன்...
சித்திரங்களைக் கடந்த
நுனிகளின் எதிர்ப்பதங்களால்
நீ உருமாறி நிற்பதில்
நான் உடன் பட்ட முரண்....
தனித்த உன் வெற்றுப்
பாறைகளில்
நான் மீண்டும் மீண்டும்
என்னையே நடுகிறேன்...
உன் அன்னிச்சை மலர்களை
எத்தனைதான் கொய்ய வேண்டும்
கூறு...-உன்
வேர்களின் ஆழ் பரப்பில்
நான் யாருமற்று மண்டியிடுகிறேன்...
எல்லா கனவுகளையும் நீ
சுருட்டிக் கொண்டு நிற்கிறாய்...
நான் வெளிச்சமற்று.. புகையாகி
உன் புகைப்படம்
திருடுகிறேன்...வழக்கம் போல...
உடைந்து நொறுங்குகிறது
உன்
சித்திரக் காடுகளின் நுனி...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (14-Mar-16, 1:26 pm)
பார்வை : 96

மேலே