இனி
மகளிர்
மனங்களின் மாற்றம்
நிகழ்ந்திட
நடப்புகளில் கவனம்..
புகழுக்குள்
புழுங்கிப்போகிடாது
தேடலின் தொடக்கம்..
வீழும் பாதைகளில்
தேரார் தற்கொலை எனும்
முடிவுகள்..
நாளும் தொடரும் அடக்குமுறை
கண்டு எழுவர்.
தினத்தாள்கள் தேடி அறிவை நாடிடில்
முதியவர் இன்னும்
மகளிரை வீட்டுக்குள்
அடக்கிடத் துணிவரோ
தம்
அனுபவ அறிவென
அவர்களின் அறியும்
அவாவினை அறியா
அறிவுரை நவில்வரேல்
பொறுப்பரோ மகளிர்?
இனி,
பொங்கிடும் உணர்வுடன்
போக்குகள் மாற்ற
எழுவர்! நிமிர்வர்!
தெருவழிப் பேச்சிற்கு அஞ்சார்
வருவதுணர்ந்தே
ஒன்றுபட்டு
கரங்கள் இணைத்து
அடைவர் பெண்ணின் பெருமை!