சாதியைக் கொண்டு வா

சாதியைக் கொண்டு வா
வீதிக்குக் கொண்டு வா
நீதிக்கு முன் நிறுத்து
உன் சாதி வெறியை நீ நிறுத்து
தீயிட்டு அதை நீ கொளுத்து!!!

உயிரொன்று இன்னொரு முறை
போகும் என்றால் சாதியின் தீயினை
மனிதமாக்களுக்கு நீ உணர்த்து
மானிடனாய்!!!

தீப்பந்தம் கொண்டு வா
என்றும் அணையா சுவாலையுடன்
சாதி வெறியை அணைக்கும் பந்தமாய்
நமை இணைக்கும் சொந்தமாய்
ஒரு தீப்பந்தம் கொண்டு வா!!!

முடிந்ததெல்லாம் கனவல்ல
மறப்பதற்கு
தொடங்கவேண்டும் புதியதோர் பாதை
சாதியற்ற வீதிகளாய்
சாதியைக் கொண்டு வா
வீதிக்குக் கொண்டு வா!!!

எழுதியவர் : சதீஷ்குமார் (15-Mar-16, 11:13 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 80

மேலே