என் ஆருயிர் தோழியே 555

தோழியே...

கல்லூரி நாட்கள்
நம்மை இணைத்தது நட்பால்...

இன்பமும் துன்பமும் கலந்து
இன்பமாக சென்ற அந்த நாட்கள்...

துன்பங்கள் இருந்தும் மறந்து இருந்தோம்
இன்பங்களில் பேரின்பம் கொண்டோம்...

ஆண்டுகள் ஓடியது
தெரியவில்லை...

பிரிந்து சென்றோம் உடல்களாக
மட்டுமே உள்ளங்கள் இல்லை...

நாம் கைபேசியில்
பேசும்போதெல்லாம்...

சிறகுகள் இல்லாமலே
விண்ணில் பறக்கிறேன்...

நம் கல்லூரியின் வாழ்க்கை
பசுமையாக வந்து செல்கிறது...

நினைவுகளை நினைத்து
பார்க்கையில்...

விழியோரம் வந்து
செல்கிறது கண்ணீர்...

எங்கோ உருவான நதி நம்
பாதங்களில் தழுவி செல்வது போல்...

எங்கோ பிறந்து வளர்ந்த நாம்
இணைந்தோம் நட்பு என்னும் பாசத்தால்...

தோழியே நம் நட்புக்கு கிடைத்தது
ஓர் அற்புத மதிப்பு...

நம் உறவுகள் புரிந்து
கொண்டபோது அன்று...

யாருக்கும் கிடைக்காத
மதிப்பு நம் நட்புக்கு இன்று...

உன் கணவரும் என் மனைவியும்
புரிந்துகொண்டதால்...

தொடர வேண்டும்
ஜென்மங்கள் பல...

நம்நட்பு என்
ஆருயிர் தோழியே.....

[என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம்]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Mar-16, 8:48 pm)
பார்வை : 354

மேலே