நாடகக்கலை - கற்குவேல் பா

பொருமுக எழினி
இழுக்கப்படவில்லை ,
கட்டியங்காரன் வந்து
தொடங்கி வைக்கவில்லை ,
தலைவன் - வீதியில்
உலா வரவில்லை ,
தலைவியும்
பசலையில் விழவில்லை ,
யாதென்று
தோழியர் வினவவில்லை ,
தலைவி
பதிலளிக்கவுமில்லை ,
குறத்தி
வரவில்லை ,
உயர்த்தி
குறி சொல்லவுமில்லை ,
பரிசுகள்
கொடுக்கப்படவில்லை ,
குறவனதில்
மயங்கி வினவவுமில்லை ,,
இவ்வாறாக - மெல்ல
இறந்தது
நாடகக்கலை !

#நன்றி_பேரா_க_இராமச்சந்திரன்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (15-Mar-16, 10:51 am)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 138

மேலே