விளக்கேற்றி வை
விளக்கேற்றி வை
திக்குத் தெரியாமல்
தத்தளிக்கிறாள் அவள்
என்றவுடன் மிரண்டேன்
வெகுவாக சற்று நேரத்தில்
மருட்சி நீங்கி என்னைப் புரிந்து
உணர்ந்தேன் நிலைமையை
எவ்வளவு பெரிய சொல்
என்று திகைத்தேன்
சொன்னேன் பின்னே
சற்று ஆசுவாசமாக
அவள் யாரிடம்
நெருக்கமாக இருக்கிறாளோ
அவள் ஏற்றட்டும் விளக்கை
எரியட்டும் பிரகாசமாக
ஒளிரட்டும் ஒளி விளக்காக
நான் எங்கு வந்தேன்
என்று சொல்லி திரும்பிப்
பாராமல் நடந்தேன் வேகமாக.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
