ஆப்பிள் 6S

ஆப்பிள் 6S
ஒன்றுடன் கைலாயம்
விசிட் செய்த நாரதர்
அதை சிவபெருமானிடம் தர..
அவரோ தன்னிடம் உள்ள
சாம்சங் நோட்பேட் போதுமென
உமையவளிடம் தந்து விட ..
அவரோ தனக்கு
ஆப்பிள் ஐப்பெட் மினி போதும்
என்று கணேசனிடமும் குமரனிடமும்
கொடுத்தார் ..கண்டிஷனோடு
..
எவர் முதலில் 1K லைக்குகள்
தங்கள் ஸ்டேடஸ் பதிவிற்கு
பெறுகிறாரோ ..அவரே அதை
வைத்துக் கொள்ளலாம் ..
என்று ..
..
கணநேரத்தில் தமிழ்க் கடவுளான
குமரன் 1800 மரபுக் கவிதைகள் ..
1300 புதுக் கவிதைகள் ..
10400 எதுவும் புரியாத
பின் நவீனத்துவக் கவிதைகள்
பதிந்து விட்டு கணேசரை
கர்வமாக பார்த்திட
வந்து விழுந்த மொத்த லைக்குகள்
3600..
..
கையில் ஐபோனை வாங்கிய
கணேசர்
அம்மா அப்பா மடியில்
அமர்ந்தபடி ..
ஆறு செல்பிகள்
எடுத்து போட்டோஷாப்பில்
வண்ணங்களில் குழைத்து
வெளியிட..
..
வந்து குவிந்தன
லட்சத்துக்கு மேல் லைக்குகள் ..
..
கை மாறியது 6S
கணேசருக்கு..
குமரன் கோபத்தில்
சென்றது ..
செவ்வாய் கிரகத்திற்கு ..
..
அவரை
சாந்தப்படுத்திட ..
ஒரு மோட்டோ G யுடன்
விண்கலத்தில்
பறந்து கொண்டிருப்பது
அவ்வைப்பாட்டி ..
கையில் ..
ஆப்பிள் 5S உடன் ..
..
என்ற தகவலை
தனது டுவிட்டரில் பதிந்த
நாரதர் ..
நேரமாகி விட்டதால்
OLA காருக்கு
புக் செய்து விட்டு
நாராயணா எனும் நாமம்
பாட்டை ஹெட்போனில்
தவழ விட்டார் !..
அன்றைய வேலை
முடிந்ததென்று !