கேளாய் குதம்பாய்

பொன்னொடு பொருளும் பொதிந்து வையினும்
கண்ணொடு காதல் கசியக் கொள்ளினும்
மண்ணொடு மனத்தை மறைத்தே செய்யினும்
விண்ணொடு பயணம் வெறுங்கை குதம்பாய் !!

கண்ணீர் பிறப்பு கருதுமுலைநீர் உயிர்ப்பு
மண்ணீர் தாகம் மழைநீர் உணவு
புண்ணீர் போராம் புதைநீர் மரணம்
எண்ணீர் என்றுமே இயல்போ குதம்பாய் !!!

ஏலமொடு கடுகம் இயலக் கொள்ளினும்
ஆலமோட ரவங்கால் ஆங்கு பொதியினும்
காலமொடு வருங் கூற்றன் கருதான்
ஞாலங்காண் கூத்திது அறிவாய் குதம்பாய் !!!

அட்டமா சித்தி அறிந்தோர் தமக்கு
இட்டமா நிலை எளிது கை வரும்
பட்டமா துளிருமிப் பார் புகழும்
திட்டமாய்ச் சொன்னேன் தெளிவாய் குதம்பாய் !!

அஞ்சறைப் பெட்டியுள் அடங்கா மருந்து
நெஞ்சறை பெட்டியில் நிலையாத் துமி
கஞ்சறை கருதுமோ காமம் போற்றுமோ
விஞ்சறை யேகுமே விரைந்தே குதம்பாய் கஞ்சம் : பொன்


ஞமலிபெறு தெங்கென நாம்காண் சீவன்
ஏமங் கருதாது எடுத்தலைந் திழிவோம்
ஊமங் கனவென ஒரு கணமறியோம்
சாமந் தெளியோம் சாகுங்காலும் குதம்பாய் !! சாமம் : வேளை

இலமெனில் இலன் இலதென்போர் இலமிலன்
உளமெனில் உளன் உளமென்போர் உளமுளன்
நலஞ்சேர் நாயகன் நல்லடி போற்றி
வளஞ்சேர் வாழ்வுகொள் வஞ்சிக் குதம்பாய் !

எழுதியவர் : (16-Mar-16, 2:36 pm)
பார்வை : 79

மேலே