ஹைகூ கவிதைகள்

"வைட்டமின் புரதம் மினரல்
நிறைந்த தலைமுடி ஷாம்பூ"
எதிரே சவலைக் குழந்தை

தலையாட்டி அழைத்தும்
எதுவுமே சொல்லவில்லை
சாலையோரப் பூக்கள்

காலிப்பாத்திரமென
கைதவறிவிட
தரையெங்கும் சிதறுது சப்தம்

ஆத்தைக் கடக்கணும்
ஆழமில்லா இடம்பார்த்து
நெடுகிலும் மணல் குவாரி

மணல் குவாரிக்காரருக்கு
குழந்தை இல்லை
முற்பகல் செய்யின்.....

எழுதியவர் : (17-Mar-16, 2:29 pm)
பார்வை : 128

மேலே