கனவாக இருக்காதோ-

கண்கள் மூடி உறங்கும் முன்னே,
சிறு வேண்டுதல் - நாளைய நாள்
நல்லதாக அமைய!

கனவில் ஏதோ, சலசலப்பு!
நடுநிசியில்,
தெரு நாய்களின் ஓலம்!
என்னவிது என்று எண்ணும்போதே,
அயர்ந்து மூடிய கண்கள்,
விழித்தாக வேண்டி,
என் அலைபேசி சத்தம்!
என்னவளின் அழைப்போ!
இல்லை,
தூக்கத்தை கெடுக்கும்,
வாடிக்கையாளர் சேவைமைய அழைப்போ?
யோசனைகள் பாயும்போதே,
இடியென விழுந்தது!

மழைத்துளிகள் குவிந்து,
என் கண்களில்,
ஒரு நதியே உருவானது!
அழைத்து கொண்டான் என் அன்னையை,
அந்த அற்ப இறைவன்!

பதறியடித்து பேருந்தில் அடைக்கலம்!
நிமிடத்திற்கு ஒரு முறை,
என் நிம்மதியை கெடுத்த,
தொலைபேசி அழைப்புகள்!
கனவாக இருக்க கூடாதா?

சன்னலோரம் சாய்ந்தாலும்,
தூங்க மறுக்கும்,
என் வற்றிவிட்ட கண்கள்!
எப்பொழுதும் என்னை நினைப்பாளே!

உன் கைகளை பற்றியே
நடை பயின்றேன்!
இன்று, உன் கைகளை உதறி,
சென்று விட்ட மர்மம் ஏனோ?

விடையேதும் தெரியவில்லை!
இது, எவன் வினையென்றும்,
புரியவில்லை!

எழுதியவர் : Sherish பிரபு (17-Mar-16, 6:06 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 282

மேலே