நாய்குட்டியின் இதயம்

காற்றுடன் விளையாட
மறுக்கும் பட்டத்துடன்
அச்சு அசலாய் ஒத்துப்போனது
ஓரமாய் அமர்ந்திருந்த
நாய்குட்டியின் இதயம் ,
அதன் நூல்ப் பார்வை
கயிறு பிடித்தவனோடு
பறக்கலாமென
காத்துக் கொண்டிருக்க
அவன் பார்வை
காற்றின் பார்வையாக
வசப்படாமல் இருந்தது.
நாய்குட்டி மெல்ல வாலாட்டியது.
குறியீடு உணர்த்தியது.
அவன் நடக்கத் தொடங்கியதும்
நாய்குட்டி துள்ளிப் பறந்துகொண்டே
நூல் பார்வையை
அவனிடம் கொடுத்தது.

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (17-Mar-16, 7:48 pm)
பார்வை : 101

புதிய படைப்புகள்

மேலே