தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 8 = 40

“பூ மலர் பாதம் உனது மெல்ல நடந்து
வழி தேடி எனை நாடி வருகின்றதே..!”

“பூ மலர் பாதம் எனது மெல்ல நடந்து
உனைத் தேடி உறவாட வருகின்றதே...!”

கார் மேகம் நிறம் மாறும் நேரம்
விழாக் கோலம் பூணும் வானம்

பனி மழை பெய்யும் மார்கழி மாதம்
காமன் கணை குதிரை வேகம்

வானம்பாடி பாட்டைக் கேட்டு
மெட்டுப் போடும் இசை வேந்தன்
உன்னத இசையின் ஒலியைக் கேட்டு
உலகில் உருகாத உள்ளமுண்டோ...!

குயில் பாடும் குரல் வளம்
ஊர் எங்கும் உலா வரும்

மயில் ஆடும் சிதம் பரம்
மழை பெய்ய வரம் தரும்

வானம்பாடி பாட்டைக் கேட்டு
மெட்டுப் போடும் இசை வேந்தன்
உன்னத இசையின் ஒலியைக் கேட்டு
உலகில் உருகாத உள்ளமுண்டோ...!

எழுதியவர் : சாய்மாறன் (18-Mar-16, 10:07 pm)
பார்வை : 92

மேலே