கோடைச் சிறப்பிதழ் 2

முத்துப்புத் தகமோ மோகத்தின் தத்துவமோ
சித்தனையும் சிதறடிக்கும் காதல் சித்திரமோ
பித்தனாக்கி எழுத்தில் கவிஞன் என்றாய்
நித்திலப் புன்னகையே கோடைச் சிறப்பிதழே

கீழே வெண்பாவாக ...
ஆசிரியப்பாவிலும் சொல்லலாம்
யாப்பார்வளர்கள் பயிலுக முயலுக . கவிஞன் என்ற பெருமிதம் அடைவீர்கள் .

முத்தினின் புத்தகம் மோகத்தின் தத்துவம்
சித்தன் சிதறிடும் காதலின் சித்திரம்
பித்தனாக்கும் கோடைச் சிறப்பிதழ் பத்திரிகை
நித்திலப் புன்னகை நீ

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-16, 10:24 am)
பார்வை : 71

மேலே