என் ஆட்சி தன்னாட்சி

தலைவரே, சிலர் எல்லாம் நான் இவரோட ஆட்சி அமைப்பேன், அவரோட ஆட்சி அமைப்பேன்னு சொல்லறாங்க. நம்ம கட்சி ஜெயிச்சா நீங்க யாரோட ஆட்சி அமைக்கப் போறீங்க?

யோவ், நான் அதுமாதிரி எல்லாம் சொல்லமாட்டேன். நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா அது என்னாட்சி தன்னாட்சியாகத் தான் இருக்கும். ஏன்னா உனக்குத் தாந் தெரியுமே. எனக்கும் கீழே இருக்கற நம்ம கட்சித் தலைவர்கள் எல்லாம் என்ன நேரில பாத்தா டப் டப்னு கீழே விழுந்து கும்பிடறாங்க. தெனம் எம் படத்துக்கு பூசை பண்ணிக் கும்பிட்ட பிறகு தான் வீட்டை விட்டு வெளியா வர்றதா எ்னக்கு தனியார் துப்பறியும் நிறுவனம் தகவல் திரட்டிக் குடுத்துருக்குது. நம்ம கட்சி ஜெயிச்சா நாந்தான் முதல்வர். நம்ம கட்சிலெ உள்ள பெரிய தலைகள் எல்லாம் அமைச்சர்களா இருப்பாங்க. ஆனா, என்னக் கேக்கமா என்னோட அனுமதி இல்லாம அவுங்களால எதுவும் செய்யமுடியாது. அவுங்க துறைகளச் சேர்ந்த விஷயங்களுக்கும் எம் பேர்ல தான் அறிக்கைகள் வெளியிடுவாங்க என்னோட அனுமதியைப் பெற்ற பிறகு. அதத் தாய்யா நா என்னாட்சி தன்னாட்சி -ன்னு சொன்னேன்.

அய்யா நீங்க சொல்லறது சரிதானுங்க. நீங்க இல்லன்னா நம்ம கட்சியே இல்லீங்க அய்யா.

எழுதியவர் : மலர் (19-Mar-16, 10:21 pm)
பார்வை : 129

மேலே