உலகம் உய்யட்டும்

சுகம் இலக்காகும்
சுபம் நிறைவாகும்
சுயம் வேண்டுவது
சுரம் சிறப்பாகத்தானே!

வாழ்வதும் வீழ்வதும்
நோக்கத்தையும்
இலக்கையும்
பொறுத்ததே!

இறைவனின் தூதரென்று
வந்தவர்களில் சிலர்
தொழத்தான் சொன்னார்களேயோழிய
தோன்றலின் நோக்கத்தை சொல்லவில்லையே!

மனிதன் பிறந்ததும்
அவன் அடையாளம்
அவனை ஆட்கொள்கிறது,
அதனாலேயே அவதியுறுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்குள்
இருக்கும் இறையே
அவனுக்கு போதும்.
அது நல்வழி காட்டும்
மனசாட்சியை விட
மருந்து இங்கில்லை.

தவறுகள் பாவங்கள் எல்லாம்
புயலாக கடந்து செல்லும்
பூமியில் நிலைத்து நிற்பது
தர்க்கமல்ல, அந்த சாட்சியே சாந்தமே!

மனிதன் சில ஈர்ப்புகளில் இருந்து
தன்னை காத்தாலே போதும்,
சிக்கல்கள் அவனை சீண்டாமல் இருந்தாலே
சிறப்பாகும் வாழ்க்கை.

அவனுக்கு அவனே தெய்வம்
ஏசு அல்லா எல்லாம் தேவையில்லை
இந்து முஸ்லிம் என்று சாந்து பூசப்படுகிறான்,
ஜாதி என்னும் மாயையில் மாட்டிக்கொள்கிறான்?

இறைவன் மனிதனை படைத்ததே
மனிதனாக வேண்டித்தான்; ஆனால்
அவன் ஏன் தெய்வமாகத்துடிக்கிறான்?
முடியாமல் ஏனோ மிருகமாகிறான்?

இனத்தை பெருக்கவும்
குணத்தில் சிறக்கவும்
சூரியன் சந்திரன் போன்று
ஒளிர்ந்து மிளிரவே
படைத்தான் இறைவன் அவனை.

பணம் என்பது உச்சமா?
படைத்தவனுக்கு அது சொர்க்கமா?
நான் என்ற செருக்கில் யார்
அவனை வாழப்பணித்தது?

இயற்கை உருவாக்கிய மனிதன்
செயற்கையை உருவாக்கி அதில்
உருக்குலைந்து போக ஒன்றும்
உலகத்தில் அவன் உருவாகவில்லை.!

உணர்வைத்தொலைத்து உயிரை கெடுத்து
உச்சத்திலிருந்து விழாது உருப்பட்டாலே
உலகம் உய்யும், அதன் உன்னதம் விளங்கும்!

எழுதியவர் : செல்வமணி (20-Mar-16, 7:18 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே