எனை விட்டுச் செல்லாதே

உனக்காக காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக எதையும் நான் கண்டதில்லை
உன் நினைவே என் வாழ்வென்று
வாழ்ந்து வந்தேன்
ஏனோ இன்று எனையும் நொந்தேன்

உனைக் காணமல் இருந்திருந்தால்
நான் தொலையாமல் இருந்திருப்பேன்
உனைக் கண்டதாலோ என்னவோ
நான் இன்று இறந்துவிட்டேன்
இறந்தாலும் பரவாயில்லை
உன் நினைவலையில்

உனை மறந்து வாழ்தல் கொடிது
அதை விட கொடிது
உனைப் பிரிந்து வாழ்தல்
நான் இறந்தும் வாழ்தல் கொடிதிலும் கொடிது

அறியாமல் உனைக் காதலித்த
என்னிதயமும் தான் துடிக்குதடி
உன் பிரிவைத் தாளாமல்

உன் முகம் காண
என்னகமும் தான் ஏங்குதடி
எக்கணமும் தான் தேடுதடி

உன் புன்னகை சிந்தும் முத்துக்களை
பொன் நகையாய் சேகரிக்க
என் மனதில் இடமும் தான் உள்ளதடி
எனை விட்டுச் செல்லாதே நீயும் தான்!!!!!!

எழுதியவர் : சதீஷ்குமார் (19-Mar-16, 10:40 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 332

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே