உன்னில் நீ நம்பிக்கை கொள்

உன்னில் நம்பிக்கை
இழந்தால் பொய்கள் எல்லாம்
உண்மை ஆகி போகும்
உன் எண்ணம் மாறி போனால்
உன் வாழ்வும் சிதறி போகும்
சமூகமும் ஏளனம் செய்யும்

விழுவதும் எழுவதும் இயல்பானது
உன்னில் நீ நம்பிக்கை கொள்
நீ நம்பிக்கை இழந்தால்
உன்னை எதிரி கூடா பயன்படுத்துவான்
உன்னில் தோல்வி என்னும் அரக்கனும் குடி கொள்வான்
உன் வாழ்வும் இருண்டு போகும்

நம்பிக்கை இருக்கும் வரையே
வெளிச்சம் கூட உன்னுடன் வரும்
நம்பிக்கை என்னும் துடிப்பை இழந்து விடாதே
வலி வந்தால் தான் வாழ்வின் சுகம் தெரியும்

எழுதியவர் : கலையடி அகிலன் (19-Mar-16, 4:12 am)
பார்வை : 416

மேலே