குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கிற் கூட்டம் - பாடல் 52

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

இதுவுமது

பாங்கன் தலைவனோடழுங்கல்.

(இ-ள்) இங்ஙனம் வருந்திய பாங்கன் சகியாதவனாய்த் தலைவனோடு வருந்துதல்.

கட்டளைக் கலித்துறை

மேகம் பணியுங் குழலா ளொருத்திக்குன் மெய்வருந்து
மோகம் பலசொல்லி யுந்தணி யாய்முனை வேலுடனே
காகம் படருங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
பூகம்ப மெய்தி லதையார் தணிப்பர்தம் புந்திகொண்டே! 52

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (15-Jun-24, 8:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே