மனமும் மனிதர்களும்
மனமும் மனிதர்களும்
மனிதர்கள் உயிரோடு
பரபரப்பாய் அலைந்தாலும்
அவர்கள் மனம் என்னவோ
எப்பொழுதும் தொல்பொருள்
ஆராய்ச்சி செய்து கொண்டுதான்
இருக்கிறது
செத்து போன அல்லது
புதைந்து போன
நிகழ்வுகளையே தோண்டி
எழுப்பி தன்னையே
காயப்படுத்தி கொண்டுதான்
அலைகிறார்கள்
வெளியே சர்வ
அலங்காரமாய் ஆணும்
பெண்ணும் புன்சிரிப்பாய்
காட்டி கொண்டாலும்