எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக

எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
என்னில் எந்த
மாறமும் இருப்பதாக
எனக்கு
தெரியவில்லை
எல்லாமே வழக்கமாய்
செயல்பட்டு கொண்டிருக்கிறது

உடன் இருக்கும்
நண்பர்கள் முதல்
உறவுகள் வரை
கூட என்னுள்
மாறத்தை சொன்னதில்லை

பல வருடம்
கழித்து பார்த்த
ஒருவர் அல்லது ஒருத்தி
சட்டென சொல்லி
விட்டார்
கிழடு தட்டி
போய்விட்டாய் என்று

உண்மையா..! உண்மையா..!
பல முறை
எனக்குள் கேட்டு
முக கண்ணாடியில்
முன்னூறு தரம் பார்த்து

வீணாய் மனதை
அலட்டி கொண்டு
இருக்கிறேன்
எனக்கு வயதாகிவிட்டதே
என்னும் வருத்தத்துடன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Jun-24, 10:34 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 88

மேலே