உலக காற்று தின கவிதை

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

*உலக காற்று தினக்*
*கவிதை*


ஆக்கம் ; *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

காற்று.....
உயிரின் இருப்பிடம்
உயிர்வளியின் பிறப்பிடம்

செடி கொடி மரங்களுக்கு
ஆடல்களைக் கற்றுத்தரும்
நடன ஆசிரியர்....

அருவி கடல்கள்
பாடுவதற்கு
பயிற்சி அளிக்கும்
பாடலாசிரியர்.....

குணத்தில் அன்னை
கோபத்தில் கண்ணகி
அணைப்பதில் காதலி
அடிப்பதில் மனைவி

இயற்கையாக
இருந்த தேசத்தில்
இன்பமாய் இருந்தது..
செயற்கை
உருவான தேசத்தில்
துன்பமாய் இருக்கிறது

மூச்சு விட முடியாமல்
திணறுகிறது காற்று....

'இசைத்துக்' கொண்டிருந்த
காற்று
இப்பொழுது
'இரும்பிக்' கொண்டிருக்கிறது...

காற்றின் உடலெங்கும்
'கட்டிகள்......!'

காற்றின் முகத்தில்
'கரியைப்' பூசிக்
கொண்டிருக்கிறோம்
அது என்று
நம் மீது 'சாணியக்' கரைத்து
ஊற்றப் போகிறதோ....?

வெடியை வெடித்து
நாம் கொண்டிருக்கிறோம்
'காற்றின் மீது காயங்கள்... !''

கண்டதை எல்லாம்
போட்டு எரிக்கிறோம்
என்று அது
'நம்மை போட்டு
எரிக்கப் போகிறதோ.....?'

ஆரோக்கியமாகச்
சுற்றியக் காற்றை
நோயாளிக்கி படுக்க வைத்தோம்...
விரைவில்
அதை 'பாக்கெட்டில்'
அடைக்கப் போகிறோம்....
அதை பாக்கெட்டில்
அடைக்கப்படும் போது
எத்தனை பேர்
'சவப்பெட்டியில்
அடைக்கப் போகிறார்களோ...?'

_உலக காற்று தின வாழ்த்துகள்!!!_

*கவிதை ரசிகன்*

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Jun-24, 7:01 pm)
பார்வை : 14

மேலே