அடடா வாழ்க்கை இதுவன்றோ

"கைகள் இரண்டிலும் மலர்கள் நனைய
கண்கள் இரண்டும் மழையில் குடிபெயர
இதழ்களில் நல்மொழி வாசிக்க
நெஞ்சங்களில் இதயம் பரிமாற
கால்கள் இரண்டும் வான்வெளியில் மிதக்க
கனவுகள் நிஜமாகும் வரம் இதுவே
ஒருமுறை பூக்கும் மலரிதுவே !
பஞ்சணையில் பெயர் எழுத
மஞ்சணையில் உறவு எழுத
மகிழ்ச்சியில் ஒரு துணை வருமே
சாதிக்கவே நம் கரம் பிடித்திடுமே
சோதனையில் பல வினா அதில்
சொந்தங்கள் விடை பெறுமே
அடடா வாழ்க்கை இதுவன்றோ !

எழுதியவர் : சு.சிவசங்கரி (14-Jun-24, 6:31 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 61

மேலே