கொடிநாள் தினக் கவிதை
#கொடி_நாள்_தினக்_கவிதை
#ஒரு_இந்தியனாக_இதை_படி
#ஆக்கம்_கவிதை_ரசிகன்_குமரேசன்
தேசியக்கொடி....
ஒவ்வொரு
தாய் நாட்டிற்கும்
குடிமக்களுக்கும்
இடையேயான உறவை உறுதிப்படுத்துவற்கான
"தொப்புள்கொடி.....!"
கொடி தினம்
முப்படையினரின்
தியாகங்களையும்
வீரத்தையும்
போற்றுவதற்கு முளைத்த
பூச்செடி....
தேசியக்கொடி .....
சுதந்திரப் போராட்டத் தறியில்
உயிர் நூல்களுக்கு
இரத்தத்தாலும்
கண்ணீராலும்
சாயம் கட்டி நெய்தது என்பனத
மறந்து விடாதே.....!!!
தேசியக் கொடி
பறந்து கொண்டிருப்பது
வெறும் கயிற்றினால் அல்ல....
வீரமரணமடைந்த
வீரர்களுடைய
மனைவிகளின்
தாலிக்கயிற்றினால்தான் ....
தேசியக் கொடியின்
நடுவில் இருப்பது
தேசிய சக்கரம் மட்டுமல்ல....
வீரமரணமடைந்த
வீரர்களின்
மனைவிகள் இழந்த
திலகமும்தான்......
தேசியக்கொடி
ஏற்றும் போது
உள்ளிருந்து விழும் பூக்கள்...
கணவன்கள்
வீரமரணமடைந்ததால்
மனைவிகளின்
கூந்தல்கள்
இழந்த பூக்கள் என்பதை
எத்தனை பேர் அறிவார்களோ?
குடும்பத்தை விட்டுப் பிரிந்து
எல்லையோரத்தில்
விடிய விடிய
விழித்து இருப்பதால்தான்...
நாம் குடும்பத்தோடு
வீட்டுக்குள்
விடிய விடிய
உறங்க முடிகிறது என்பதை
எண்ணிப் பார்க்க
நமக்கு
நேரமில்லாமல் போனதே.....?
நான்கு சொட்டு மழைக்கு
நானூறு ரூபாய் குடையும்....
முப்பது டிகிரி வெயிலுக்கு
முப்பது ரூபாய் குளிர்பானமும்....
அதிகாலைக் குளிருக்கு
ஆயிரம் ரூபாய் கம்பளியும்
நமக்கு தேவைப்படுகிறது...
ஆனால்......
வீரர்கள்
கொளுத்தும் வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
பொழியும் பனியிலும்
இயந்திரத் துப்பாக்கியுடன்
எல்லா உணர்வுகளும் இருந்தும்
"இயந்திரமாக" நிற்பது
எவ்வளவு
கஷ்டமானது என்பதை
நாம் என்றாவது உணர்ந்திருக்கிறோமா...?
தாலி கட்டிய
புது மனைவி
கணவனுக்கு பதில்
தாலியைத்
தொட்டுத்தொட்டு பார்ப்பதும்...
தாய்மையடைந்த மனைவி
கணவன்
அருகில் இல்லாமையால்
வயிற்றைத்
தடவி தடவி பார்ப்பதும்....
இரவில் உயிர்பெறும்
தாம்பத்தியத் தாகத்தை
இளம் மனைவிகள்
தண்ணீரில் தணிப்பதும்
நமக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
வெடிகுண்டு கழுகுகள்
காத்துக்கொண்டிருக்கிறது
வீரர்களின் உயிர்களை
எந்த நேரத்திலும் தின்பதற்கு...
எதிரி நாட்டு துப்பாக்கிகள்
காத்துக் கொண்டிருக்கின்றது
வீரர்களின் உயிர்களை
எந்தநேரத்திலும்
வேட்டையாடுவதற்கு....
இவர்களது வாழ்க்கையை
மரணங்கள் தான்
தீர்மானிக்கின்றது.....!!!
இனியாவது
தேசியகொடியை
'ஆடையில்' குத்தாமல்
'அகத்திலும்' குத்துவோம்...!!!
வீட்டைப் பற்றி மட்டும்
யோசிக்காமல்
நாட்டைப் பற்றியும்
யோசிப்போம் ...!!!
♥அனைவருக்கும் உலக கொடி தினம் நல்வாழ்த்துகள்♥
வாழ்க இந்தியா !
வளர்க பாரதம் !
ஜெய்ஹிந்த்!
கவிதை ரசிகன் குமரேசன்