ஒரு தமிழன் கதை

ஒரு தமிழன் கதை

தம்பி உன் பெயர்
என்ன என்றேன்
"திருமேனி"

யார் வைத்த பெயர்
என்றேன்.
தாத்தா என்றான்.
தாத்தாவின் பெயர்?
"சிவன் "

ஆகா சிவன்!
உனக்கு ஒரு பேரன்
அவனுக்கு பெயர்
"திருமேனி"
என்ன உன் தமிழ் பற்று!

கேட்டதெல்லாம்
பாரதி பிறந்த
நாட்டில் இல்லை!
கேட்டதெல்லாம்
மலேசியாவில்!

சிவனே இப்படி கொடு
உன் உடுக்கை.
ஊர் ஊராக சென்று
தமிழ் நாட்டில்
உன் கதை சொல்ல
சிவனே இப்படி கொடு
உன் உடுக்கை.

சண்டியூர் பாலன்.
** பின்புறம் உண்மை
சம்பவம்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (14-Jun-24, 12:54 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 27

மேலே