மழை
மழை வரும் நேரம்
தோகை மயில் ஆடும்
கருமேகம் கூடும்
காற்றும் இதமாக வீசும்
துளிகள் நிலத்தில் தூவும்
மண்ணின் மணம் பரப்பும்
தன்னை மறந்து ஓடும்
கால்கள் குடிசை தேடும்
மின்னல் வழி காட்டும்
இடியோசை விரட்டும்
வேக நடை போடும்
கூரை ஓரம் நிற்கும்
சாரல் உடலை நனைக்கும்
மகிழ்ச்சியில் உள்ளம் குளிரும்
மணித்துளிகள் கரைந்திடும் - ஆயினும்
காத்திருத்தல் சுகம் தரும்.