இயற்கைத் தாய்
கோழிகள் பல கூவையிலே,
சோலைகளில் பூ பூக்கையிலே,
விலங்கெல் லாம் விழிக்கையிலே,
வானம் கொஞ்சம் விடியலிலே,
நட்சத் திரங்கள் உறங்கையிலே,
நாளின் நேரம் தொடங்கையிலே,
காலைப் பொழுதின் துவக்கத்திலே,
கண்டேன் அத்துனை அழகினையே!
விடியற் காலைப் பொழுதினிலே,
வேலையைத் தொடங்கும் தருணத்திலே,
சோம்பல் நீக்கிடும் செய்திகளிலே,
சிற்றுண்டி உண்ணும் காலத்திலே,
காற்று வீசும் தென்றலிலும்,
கிளம்பிச் செல்லும் நேரத்திலும்,
சூரிய காந்தியின் நாயகனே
சுட்டெரிக்கும் நிலை தானே!
தோற்றம் கொண்ட இயற்கையிலேபல
மாற்றம் மாறக் கண்டோமே!
செழித்திருந்த தேசம் பலவின்று
சீற்றத்திற் குண்டாகக் கண்டோமே!
தோன்றிய மரமும் செடியுமின்று
தோண்டப் படுவதைக் கண்டோமே!
பச்சைப் பூத்திருந்த பூமியிலேஇன்று
பருக நீரில்லாநிலை கண்டோமே!
அழித்தோம்! அழித்தோம்! இயற்கையையேநாம்
செழிக்க வேண்டெமென்ற எண்ணத்திலே!
பழித்தோம்! பழித்தோம்! இயற்கையைநாம்
விழிக்கத் தவறிய பிழையாலே!
விழிப்போம்! விழிப்போம்! நமது
துயிலைத் துடைப்போம்! துடைப்போம்!
பிழைப்போம்! பிழைப்போம்! இயற்கையைநம்பிச்
செழிப்போம்! செழிப்போம்! புகழோடு.