சூடா லைக்கும் பண்ணணும்

பாய்ஞ்சு வந்தத் தண்ணியில்
****பயமில் லாமக் குளிக்கிறேன்
தேய்ச்சுக் குளிக்க வில்லைநான்
****தேகம் குளிரக் குளிக்கிறேன் !
ஆச தீரக் குளிக்கிறேன்
****அழாம நானே குளிக்கிறேன்
பேசக் கூட முடியல
****பின்னால் தண்ணி முட்டுது !
ஆடை யின்றிக் குளிக்கிறேன்
****அமர்ந்துக் கொண்டே குளிக்கிறேன்
கோடை வெயிலும் தெரியல
****கொஞ்சங் கூட சலிக்கல !
அம்மா துணையா நிக்குறா
****அப்பா போட்டோ எடுக்குறார்
சும்மா விடவாப் போகிறார்
****சுற்றி வாட்ஸ்அப் பண்ணுவார் !
நாளை உமக்கும் வந்திடும்
****நல்லா என்னப் பாக்கணும்
தோளைக் குலுக்கி ரசிச்சதும்
****சூடா லைக்கும் பண்ணணும் ....!!!
( வல்லமை.காம் - ல் படக்கவிதை போட்டியில் சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெற்றுத் தந்த பாப்பா பாடல் )