மலர்கள்

தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்
பார்ப்பார் இல்லையே பறிப்பார் இல்லையே
என்று வருத்தப் படுவதில்லை.
நாளை பூப்பதற்கு தயங்குவதில்லை
மறப்பதில்லை

பறிப்பதில்லை
பயன்படுத்தத் தெரியவில்லை என்றால்
மனிதன் ரசனை அற்றவன் !

மலர்கள்
இயல்பாய்ப் பூத்து என்றும்
இயற்கையோடு சிரிக்கும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-16, 9:40 am)
Tanglish : malarkal
பார்வை : 534

மேலே