எழிலரசியே
ஓராயிரம் சொற்களை கோர்த்து
காவியம் தீட்டினேன்
உனக்கு மணிமகுடம் சூட்ட!!
கவிதைகள் திரட்டி
பூஞ்சோலைகள் உருவாக்கினேன்
உன் கூந்தலில் அலங்கரிக்க!!
வானவில் வண்ணங்கள் சேர்த்து
ஓவியங்கள் படைத்தேன்
உன் கைகளில் மருதாணியாக்க!!
ஏழு ஸ்வரம் கொண்டு
தேனமுதான இசை மீட்டினேன்
உன் செவிக்கு அமுதாக்க!!
உலகின் திறனனைத்தும் தோற்த்ததடி
இயற்கையின் எழில் கொண்டு
படைத்த உன் பெண்மையை கண்டு!!!