நீ நிலவோ

உன் பொட்டு புது நிலவோ
உன் புன்னகை வெண்ணிலவோ
உன் இதழ் தேன்நிலவோ
உன் இதயம் காதல் வளர்நிலவோ !
உன் பாட்டு தமிழ் இசையோ
உன் பேச்சு தமிழ் அமுதோ
உன் விழிகள் நீல நதியலையோ
உன் மனம் மௌன சங்கீதமோ !
உன் அழகு ரவிவர்மன் ஓவியமோ
உன் மேனி கம்பன் தொடாத காவியமோ
உன் அசைவு அரங்கேறும் நாட்டியமோ
நீ நான் இன்னும் எழுதாத இலக்கியமோ !
~~~கல்பனா பாரதி~~~