நடமாடும் நதிகள் 47 - கோபி சேகுவேரா

இடி விழுந்த வீட்டில்
புதிய வீடு
கட்டியது சிலந்தி

*

வேகாத வெயில்
வெந்து விடுகிறார்கள்
கோடையில் மக்கள்

**

ரயில்களை விட
ஆவணக்கொலைகளை அதிகம் பார்க்கிறது
தற்போதைய தண்டவாளம்

***

'எனக்கு யார் இருக்கா'
'இதுதான் என் கடைசி'
தேர்தல் நெருங்குகிறது

****

புரட்டாத பக்கங்கள்
திறக்காத புத்தகம்
உச்சபட்ச வன்முறை

*****

வயலில் மண்புழு தேடியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை

******

எங்கள் ஊரின் ஹெலிகாப்டர்
தாழப் பறக்கும்
தும்பிகள்

*******

அவர் பசிக்கு
நம் பசியாற்றுகிறார்
ஹோட்டல் மாஸ்டர்

********

கல் கிடைக்கும் வரை
நாயிடம் பேச்சுவார்த்தை
ராஜதந்திரம்

*********

சன்னலும் ராஜா பாட்டும்
தயாராக இருக்கட்டும்
மழை வரப்போகிறது

**********

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (23-Mar-16, 7:02 am)
பார்வை : 340

மேலே