இயக்கத்தின் எதிரே
தயங்கிச்துணிந்த பொழுது,
இயல்புதாண்டி இயங்கியது இதயம் !
முயன்றுபார்த்தும்,
முடக்க இயலவில்லை அதன் துடிப்பை !
தொடர்பு எல்லைக்கு வெளியிலிருந்தது மூளை !
இருந்தபோதும் இழந்துகொண்டிருந்தேன் கவனத்தை !
நேர்முகமோ மறைமுகமோ அன்று வெளிப்படையாய் !
தவறுகளில் தடம்புரளும் வாழ்க்கையின் நியதியுடன் !
கற்பூரம் தொட்டு கண்ணிலொற்றி கால்கள் நடுங்கி !
தைரியத்தை தலையிலேற்றி கடவுளின்முகம் பார்த்து !
வரம்வேண்டி மண்டியிட்ட தடதட நொடிகளில் !!