தனிமை

ஓடி கொண்டு இருக்கும் வாழ்வில்
விதி செய்யும் சதிவலை
சிக்கி கொள்வதால் வருவது
இது வந்தால் காட்டில்
தனிமையில் வாடும்
மலர் செடி போல வாடிப்போகும்
வாழ்க்கை என்னும் பூந்தோட்டம்
இறந்த கால நாபக சிதறல்கள் தன்னில்
முட்டி மோதிம் நெஞ்சு விடும் சோகம்
கண்ணீர் துளிகள் ஆகும்
தனிமை சூழ்ந்து கொள்ளும் போது
மௌன உணர்வும் ஒட்டி கொள்ளும்
மௌனம் குடி கொண்டால்
இருளும் ஒட்டி கொள்ளும் வாழ்வில்