ஏழையின் ஊமைக் காதல் --முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
என் தாயவள்
என் மேல் அளவு கடந்த
பாசம் வைத்திருந்தாலோ
தெரியாது..,
என் முகம் பார்க்காமலே
சுவனம் சென்று விட்டாள்
நான் ஏழை என்றாலும்
மனிதன் என்பதால் ஒரு
மடந்தை மீது காதல்...,
அவள் நடக்கும்
பாதையெல்லாம்
ரோஜாவிதழ்களை தூவி
அதன் மேல் அவள் பாதம்
நடக்க கனாக் காண்கிறேன்
ஆனால் இந்த ஏழையால் ஒரு
ரோஜாச் செடியை
மட்டுமே வாங்க முடியும்.
என் காதலை உன்னிடம்
சொல்ல முடியாத இந்த ஊமைக்
காதலனால் உனக்கு ஆடம்பர
உடைகள் வாங்கித் தர இயலாது
ஆனால் உன் பொன்னிற மேனியை
மறைக்கக் துணி வாங்கித் தர
எனக்கு சக்தியுண்டு
விதமான உணவு வகைகளை
என் கரத்தால் அந்த
செவ்வந்தி பூவிதழில் ஊட்ட
முடியாது.ஆனால் உன்
வயிற்றை பட்டினியின்றி
மூன்று வேளை கஞ்சி
ஊட்ட இந்த உடம்பில் சக்தியுண்டு
விலையுயர்ந்த கைபேசி
வைரம் பதித்த தோடு எல்லாம்
உனக்கு பரிசாக தந்து
என் காதலை சொல்ல ஆசைதான்
இருந்தும் சாலனாப்பையோடு
வாழும் என்னால் வெறும் காகிதத்
துண்டில் என் கண்ணீரினால்
என் காதலை கவியாக
செதுக்கத்தான் முடிகின்றது
இந்த ஏழைக்காதலனின் ஊமை
ராகம் என் காதலிக்கு கேட்கிறதா?