ஒரு கிளை இரண்டு கிளிகள்

ஒரு மரக் கிளையில்
இலைகளுக்கு இடையில் இணையாக
இரண்டு கிளிகள் காதலில்
கிளை வெட்டி விழுந்த போது
பச்சைக் கிளிகள் சிறகு விரித்து
பட படத்து பறந்தன வானில்
பசுமை இலைகளுக்கு
கண்ணீரில் கடைசி விடை கொடுத்து ......!

___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-16, 10:07 pm)
பார்வை : 122

மேலே