கள்ளூறும் பெண்ணிவளைக் கண்டு

சிற்பி செதுக்காத செப்புச் சிலையிவளோ ?
சிற்றிடை மூடிய சித்திரமோ ?- அற்புதமாய்
வெள்ளாடை யுள்பூத்த வெள்ளந்திக் கன்னியுனைக்
கொள்ளைகொண் டாளோ?நீ கூறு .

பால்நிலவோ? தாரகையோ? பாவையிவள் பைங்கிளியோ?
வேல்விழியின் வீச்சினில் மின்னலோ? - மால்மகளோ ?
செவ்விதழில் தேனூறும் செவ்வாய் மதுக்குடமோ
கொவ்வைக் கனியோ?நீ கூறு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-16, 11:41 pm)
பார்வை : 72

மேலே