பசியுடன்மியாவ் மியாவ்
வயோதிகப் பூனையொன்று
வாசலில் வந்து நின்றது
பசியுடன்...மியாவ்... மியாவ்...
மெலிதான குரல்,
மெலிந்த உருவம்,
எலும்பை எண்ணி விடலாம்;
பரிதாபமாக இருந்தது,
பாலும் ரொட்டியும்
பக்கத்தில் வைத்தேன்;
மெல்ல அருகில் வந்தது,
நன்றியுடன் சாப்பிட்டது,
சொல்லாமல் சொல்லியது;
மியாவ்..மியாவ்...மியாவ்....
நன்றி.. நன்றி... நன்றி....!

