பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
( பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை என்னும் பாடலின் மெட்டுல் என் காதல் வரிகள் )
காதல் சொல்ல என் மனசுக்கு விருப்பமில்லை
சொன்னால் அது நட்பு இல்லை
காதல் சொல்ல என் இதயத்தில் ஆசை உண்டு
சொல்வேன் அது காதல் அன்பே
ஆணொடு பெண் நட்பின் ஆயுள் கம்மி
என்றாலுமே நினைவோடு ஆயுள் வரும்
பிரிவாலே காதல் உண்டாகும் அன்பே அன்பே
காதல் சொல்ல என் மனசுக்கு விருப்பமில்லை
சொன்னால் அது நட்பு இல்லை
காதல் சொல்ல என் இதயத்தில் ஆசை உண்டு
சொல்வேன் அது காதல் அன்பே
காதல் சொல்ல என் நட்பும் விடவில்லை
கண்களுக்கும் பொய் பேச தெரியல
கண் அப்படியே பொய்யாக நடித்தாலும்
என் நட்பு பிழையாகுமே
அன்பாலே நான் காதல் கொண்டேன் பெண்ணெ
நட்பாலே நான் அன்பை கொண்டேன் கண்ணே
நெஞ்சம் இன்று உன்னை எண்ணி துடிக்கிறதே
காதல் சொல்ல என் மனசுக்கு விருப்பமில்லை
சொன்னால் அது நட்பு இல்லை
காதல் சொல்ல என் இதயத்தில் ஆசை உண்டு
சொல்வேன் அது காதல் அன்பே
காலம் தாண்டி என் காதல் வந்ததின்று
காலமெல்லாம் வாழும் எந்தன் நெஞ்சில்
நட்புக்குள்ளே என் காதல் புதைந்ததால்
என் காதல் புதையல் என்பேன்
நீ இன்றி ஓர் வாழ்க்கை எண்ணவில்லை
நீ நீங்கினால் என் வாழ்க்கை வாழ்க்கையில்லை
ஏன் பெண்ணாய் நீ பிறந்தாய் அன்பே அன்பே