காதல் வந்து உயிரில் சேர்ந்ததோ
காதல் வந்து உயிரில் சேர்ந்ததோ
இந்த ஆசை கொண்ட உயிரும் இன்று உன்னை சேர்ந்ததோ
வேண்டாம் என்றால் வேண்டுமென்றதே இந்த காதல் இம்சை
வேண்டுமென்றே இன்பவலியை ஏற்றதே
என்னமோ நெஞ்சினில் மின்னலாய் பாயுதே
நெஞ்சிலே மின் தூரலா நேரிடுதே இந்த காதலும்
என்ன இந்த காதல் கடவுளோ
ஒரு குதூகலம் பயணத்தில் பற்களும்
சிரிக்குதே தனிமையில் பூக்களாய்
சுதந்திர பறவைகள் போலவே
சுகம் தரும் காதலை ஏற்றுக்கொள் அன்பே
புது உலகத்தின் முதல் மனிதர்கள் ஆகலாம்
அணையுடைந்து நதி நீராய் பாயும்
இந்த காதல் தேன்
நரம்புக்குள் நுழைந்திடும்
அணுக்களில் தேன் வார்க்கும்
கண்ணை கண்ணில் பார்க்காதே
மின்னல் விழி தாக்காதே
பனித்துகள் கண்ணை மூடும்
அசைவின்றி எண்ணம் சாகும்
இதயம் இடறி விழுகிறதே
கனவினை தொடுகையிலே
தொடுகிறேன் வானத்தையும்
தொலைகிறேன் மேகமாய்
தொலைகிறேன் மேகமாய்
மீண்டும் பிறக்க பிறப்பு தா உன் பார்வையால்
விதையென விழுவாயா செல்களிலே பூப்பாயா
புன்னகையால் பூட்டி வைத்தாய் எந்தன் நெஞ்சை மாற்றி வைத்தாய்
காதல் என்னும் சிறையுள்ளே கம்பிகள் இல்லையே
ஞபகங்கள் கட்டி வைக்கும் பொன் முகமோ வாட்டிவைக்கும்
கேட்கும் பாடல் யாவும் காதலின் ராகமே
காதல் வந்த பின்னே
இதயமும் பாடுமே
அதில் உன்பெயர் கேட்குமே
வெட்கம் சொல்லும் காதல் சம்மதம் . . . . .
( காதல் ஆசை என்னும் பாடலின் மெட்டில் எழுதப்பட்ட என் காதல் வரிகள் )