என் காதலின் நிலவொளி

மறுத்திடடி மறுத்திடடி உன்னால்
மறந்திட முடியுமென்றால்
துரத்துமடி துரத்துமடி
உன் நிழலும் உன்னை வெறுக்குமடி

கனவினை மறக்கலாம்
காட்சியை மாற்றலாம்
உண்மையை ஒழிக்கலாம்
ஊர்முன் நடிக்கலாம்

தனியே அமர்ந்து
உன்னை கேளடி
அங்கே வெளிவரும்
என் காதலின் நிலவொளி

எழுதியவர் : ருத்ரன் (30-Mar-16, 1:32 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 113

மேலே