வாக்கு நம் செல்வாக்கு

ஆயிரம் வெள்ளை வேட்டிகள் வரும் - அதில்
ஓரிரண்டுதான் வெள்ளை மனம்
ஆயிரம் தலைகள் வணங்கும் - அதில்
ஓரிரண்டுதான் உண்மை முகம்
ஆயிரம் வாக்குறுதிகள் வரும் - அதில்
ஓரிரண்டுதான் நிறைவேற்றப்படும்
ஆயிரம் விளம்பரங்கள் வரும் - அதில்
ஓரிரண்டுதான் உண்மை சொல்லும்
ஆயிரம் தீமைகள் சேர்ந்து வரும் - அதில்
ஓரிரண்டு நன்மைகள் ஒளிந்திருக்கும்

சாதிமதம் இனம்மொழிகள் வழியில் வரும் - அதில்
சமுதாய கேடுகள் ஒளிந்திருக்கும்
வண்ண வண்ண கொடிகள் பறக்கும் - அதில்
இரத்த கரைகள் ஒளிந்திருக்கும்
மேடையேறி பொதுநலம் பேசுவார்கள் - அதில்
கடைந்தெடுத்த சுயநலம் ஒளிந்திருக்கும்
பாசம் காட்டி காசும் கொடுப்பார்கள் - அதில்
பதவியாசை ஒளிந்திருக்கும்
மாற்றம் முன்னேற்றம் என்றுசொல்வார் - அதில்
குடும்பமும் பின்னி பிணைந்திருக்கும்


ஒவ்வொரு ஓட்டிற்கும் கேட்டு கிடைக்கும் காசு - அதில்
ஒளிந்திருக்கும் நம் வாழ்க்கைக்கு வைக்கும் வேட்டு
ஒவ்வொரு குடும்பத்திற்கு கிடக்கும் இலவசம் - அதில்
மறைந்திருக்கும் ஒரு மாநிலத்தில் நாசம்
கரை வேட்டியிடம் நீ கைநீட்டி வாங்கும் காசு - அதில்
அடங்கியிருக்கும் உன் கையொப்பம் இட்ட அடிமை சாசனம்
உன் பையை தேடி வரும் பணம் - அதில்
அடகு வைக்கப்பட்டிருக்கும் உன் மானம்

உணர்சிகளை உதறு அறிவுக்கண் திற - அதில்
தெளிந்த உண்மைகள் தென்படும்
உறவுகளை கடந்து உண்மையை தேடு - அதில்
வீட்டின் நாட்டின் நன்மை அடங்கியிருக்கும்
தேடி தெளிந்து நல்லவருக்கு வாக்களிப்போம் - அதில்
நன்மை மட்டுமே விளைந்திடும்

வேட்பாளரின் சொல்வக்குக்காக வாக்கை விற்காமல் - அது
நம் செல்வாக்கு என்று உணர்த்து ஓட்டளிப்போம்

எழுதியவர் : சூரிய காந்தி (30-Mar-16, 2:09 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 218

மேலே