பழமொழிகளும் சொலவடைகளும் - ஒ வரிசை



ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!
ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
ஒற்றுமையே பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.
ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 8:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே