பழமொழிகளும் சொலவடைகளும் - ஓ வரிசை



ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை.
ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....
ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 8:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 143

மேலே