நான் முதல்வரானால்

எண்ணி லடங்கா எண்ணங்கள்
என்மனதில் செய்து முடிக்க
நான் முதல்வரானால் ..

சாதிமத வெறியை ஒடுக்கி
சவக் குழியில் புதைத்திடுவேன்
மீண்டும் உயிர்பெறா வண்ணம் ....

நாளும் முளைக்கும் களையென
விளையும் வீதிக்கொரு கட்சிகளை
தடைவிதிக்க சட்டம் பிறக்கும் ...
.
சமத்துவ சமுதாயம் உருவாக
தீட்டிடும் பொதுநல திட்டங்கள்
உருவாகும் மக்கள் மனம்குளிர ....

வறுமை அறவே நீங்கிடவே
வறியவர் இல்லா நிலையுடன்
வளமான தமிழகமாக மாற்றுவேன் .....

உள்ளங்கள் மகிழ்ந்திட உள்ளவரை
அல்லல் அகன்று ஆனந்தமடைய
இல்லாரும் இன்பமுற செய்வேன் ....

கல்லாமை முற்றிலும் களைந்திட
கல்விக்கு முதலிடம் திட்டமாகும்
கட்டாயக் கல்வியும் சட்டமாகும் .....

மாதரசிகள் மனம் மகிழ்ந்திட
மதுஅருந்துவோர் நலம் காக்க
மதுவிலக்கிற்கு முதல் ஆணை ...

இடுகாட்டிலும் இனம் மதமென்று
இனியும் பிரிவினைக்கு இடமின்றி
இறப்பிலாவ்து இணைய ஓரிடமே
என்பதற்கும் ஆணை பிறக்கும் ...


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (31-Mar-16, 8:25 am)
பார்வை : 1642

மேலே