ஓடிப்போன காதல் - ஒரு தாயின் குமுறல்

பத்து மாச வலிகூட
பாதிப்பா தெரியலையே!
பத்து நாளா காணலையே,
பாவி மக எங்க போன?

நெஞ்சழுத்தி பால் குடிச்ச
செல்ல மகளே!
இப்போ நெஞ்சடைக்க வச்சிட்டியே
பாவிமகளே!

கைபுடிச்சு நடந்த காலம்,
மறந்துடுச்சா? புள்ள
காலம் இருக்கு!
அதுக்குள்ள
ஏன் கைகோத்த?

பொட்ட புள்ள,
பொறந்தனு
பொத்தி பொத்தி
வளத்தேனே!
பொழுதுசாயும் முன்னே
சிட்டா
பறந்திட்டியே!

நல்லவனா? கெட்டவனா?
நாதி ஒன்னும்
தெரியலையே!
நாசமா போறவனே!
எங்கடா
நீ இருக்க?

காதுவலி
வந்தா கூட
கவனமா
சொல்லுவியே!
காதல் கீதல்
வந்துடுச்சே!
ஏண்டியம்மா!
நீ மறைச்ச?

ஊருசனம் ஏசுமே!
சொந்தமெல்லாம்
கூவுமே!
காது கொடுத்து
கேக்க முடியல!
கவலை ஏதும்
இன்னும் குறையல!

தலைநிமிந்து
போன ராசா!
தலைகுனிச்சு
வாராரே!
வாய்பிளந்து
சிரிச்ச
என் ராசா!
வாய் பொத்தி
அழராரே!

மனசு தாங்கலையே!
என் கழுதை
எங்கடி இருக்க?

எழுதியவர் : Sherish பிரபு (31-Mar-16, 5:30 pm)
பார்வை : 611

மேலே