தாள இராகம் தந்தவன் நீயே
இன்பமெனும் காட்டை தந்தவன் நீயே...
வண்ண வண்ண
மானை உலவவிட்டவனும் நீயே...
அதன் மீது ஆசையை
கொள்ள வைத்தவன் நீயே...
ஆசையின் பொருட்டு
வேடன் கையில்
ஆபத்தில் சிக்கவைத்தவனும் நீயே...
உயிரை பிரித்து
உடலை தவிக்கவிட்டு
ரசித்தவனும் நீயே...
உடையவள் மீட்க
உரியவனாகி போர்க்களம் புகுந்து
மீட்டவன் நீயே...
மீட்டெடுத்த என் இதயன்(இதய(ம் அவ)ன்)...
அவனுக்கு நானே சமர்பணம்...
சமர்பணம்...
சமர்பணம்.....
~ பிரபாவதி வீரமுத்து